ADDED : ஜூன் 26, 2025 10:13 PM
சிவகங்கை; சிவகங்கையில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் லுாயிஸ் ஜோசப் பிரகாஷ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆண்டறிக்கை வாசித்தார். மாவட்ட நிர்வாகிகள் கார்த்திக், ேஷக் அப்துல்லா, பயாஸ் அகமது, சிவா, பழனிச்சாமி, குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏராளமான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட துணை தலைவர் தனபால் நன்றி கூறினார்.