ADDED : ஜன 08, 2024 06:09 AM
திருப்புத்துார், : திருப்புத்துாரில் நாம் தமிழர் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
-பஸ் ஸ்டாண்ட் அருகே குடில் அமைத்து, கரும்பு, மஞ்சள்இலை கட்டி, கோலமிட்டு 18 அடுப்புகளில் பொங்கல் வைத்து வழிபட்டனர். பெண்கள் குலவையிட்டும், சங்கு ஊதியும், 'பொங்கலோ பொங்கல்' என பாரம்பரிய முறையில் கொண்டாடினர்.
சிவகங்கை வடக்கு மாவட்ட செயலாளர் கி.சஞ்சீவி நாதன், மாநில ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் இளஞ்செழியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.