/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்
ADDED : செப் 09, 2025 04:08 AM
சிவகங்கை: திருவுடையார்பட்டியில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனம் சார்பில் தொழில் முனைவோருக்கான திறன் பயிற்சி துவக்க விழா நடந்தது.
மத்திய அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவன மதுரை அலுவலக உதவி இயக்குனர் உமா சந்திரிகா வரவேற்றார். சிவகங்கை மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் கிருஷ்ணன், தொழில் முனைவோருக்கான திட்டங்கள் குறித்து பேசினார்.
சிவகங்கை கிளை மேலாளர் அருமைரூபன் ஜோசப் புத்தாக்க தொழில், பயிற்சி குறித்து விளக்கம் அளித்தார். மைக்கா நிறுவன இயக்குனர் சார்லஸ் நன்றி கூறினார். இத் திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் அக்., இறுதி வரை நடைபெறும் என தெரிவித்தனர்.