/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கையில் மின்கம்பம் மாற்றும் பணி குடிநீர் குழாய் உடைந்ததால் விநியோகம் பாதிப்பு மின்வாரியம் - நகராட்சி நிர்வாகம் மோதல்சிவகங்கையில் மின்கம்பம் மாற்றும் பணி குடிநீர் குழாய் உடைந்ததால் விநியோகம் பாதிப்பு மின்வாரியம் - நகராட்சி நிர்வாகம் மோதல்
சிவகங்கையில் மின்கம்பம் மாற்றும் பணி குடிநீர் குழாய் உடைந்ததால் விநியோகம் பாதிப்பு மின்வாரியம் - நகராட்சி நிர்வாகம் மோதல்
சிவகங்கையில் மின்கம்பம் மாற்றும் பணி குடிநீர் குழாய் உடைந்ததால் விநியோகம் பாதிப்பு மின்வாரியம் - நகராட்சி நிர்வாகம் மோதல்
சிவகங்கையில் மின்கம்பம் மாற்றும் பணி குடிநீர் குழாய் உடைந்ததால் விநியோகம் பாதிப்பு மின்வாரியம் - நகராட்சி நிர்வாகம் மோதல்
ADDED : ஜன 05, 2024 04:29 AM
சிவகங்கை, ; சிவகங்கை நகராட்சியில் உள்ள சில வார்டுகளில் சேதமடைந்த மின் கம்பங்கள் மின்வாரியத்தால் மாற்றப்பட்டு புதிய கம்பங்கள் அமைக்க குழி தோண்டும் பணி நடக்கிறது.
இந்த பணியின் போது சில இடங்களில் குடிநீர் குழாய் உடைந்ததால் தண்ணீர் விநியோகம் பாதிக்கப்பட்டு மக்கள் சிரமப்பட்டனர்.
நகராட்சி கமிஷனர் வெங்கடலட்சுமணன் கூறுகையில், மின்வாரியம் சார்பில் சிவகங்கை நகராட்சியில் புதிய மின் கம்பங்களுக்கு குழிகள் தோண்டப்பட்டு கம்பங்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது தோண்டப்படும் குழிகளால் குடிநீர் குழாய் சேதமடைந்து குடிநீர் விநியோகம் தடைபடுகிறது.
மின் வாரியம் சார்பில் முறைப்படி நகராட்சிக்கு கடிதம் கொடுத்து அனுமதி கேட்டிருந்தால் நகராட்சி ஊழியர்களின் உதவியுடன் குடிநீர் குழாய்கள் இல்லாத இடங்களில் அல்லது குடிநீர் குழாய் சேதம் ஏற்படுத்தாதவாறு மின்கம்பங்கள் அமைக்கும் பணியை செய்து கொடுக்க முடியும்.
ஆனால் தற்போது வரை மின்வாரியத்தில் இருந்து நகராட்சி நிர்வாகத்திற்கு எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் அவர்கள் விரும்பிய இடங்களில் குழி தோண்டியதால் குழாய்கள் உடைந்துள்ளது.
பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் தடைபடுகிறது. இதுகுறித்து கலெக்டரிடம் புகார் அளிக்கப்படும், என்றார்.
நகர் மின்வாரிய உதவி பொறியாளர் ஜிக்கிராணி கூறுகையில், மின் கம்பங்கள் அமைக்கும் போது முறையாக நகராட்சி, பி.எஸ்.என்.எல்., உள்ளிட்ட அலுவலகங்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு தான் பணி செய்கிறோம்.
அதேபோல் நகராட்சியில் மின்கம்பம் அமைக்கும் போதும் அந்த பகுதி கவுன்சிலரிடம் முறையாக தகவல் தெரிவித்து கவுன்சிலரை அருகில் வைத்துக் கொண்டுதான் மின்கம்பங்கள் அமைக்கப்படுகிறது.
குடிநீர் குழாய் சேதமான விவரம் அந்தந்த பகுதி கவுன்சிலருக்கு தெரியும். பணி நடக்கும் போதே சரி செய்யப்பட்டது என்றார்.