ADDED : ஜன 25, 2024 05:14 AM
சிங்கம்புணரி: மதுரை மாவட்டம் சுமதிபுரத்தைச் சேர்ந்தவர் குருசாமி 80,. இவர் சிங்கம்புணரி, எஸ்.எஸ்.கோட்டை வயல்களில் காலி மது பாட்டில், பிளாஸ்டிக் சேகரித்து விற்று பிழைப்பு நடத்தி வந்தார்.
நேற்று எருமைபட்டி விலக்கு அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தார். எஸ்.எஸ்.கோட்டை இன்ஸ்பெக்டர் காளீஸ்வரி விசாரித்து வருகிறார்.