/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆதி திராவிட பட்டதாரிகளுக்கு ட்ரோன் தயாரிப்பு பயிற்சி ஆதி திராவிட பட்டதாரிகளுக்கு ட்ரோன் தயாரிப்பு பயிற்சி
ஆதி திராவிட பட்டதாரிகளுக்கு ட்ரோன் தயாரிப்பு பயிற்சி
ஆதி திராவிட பட்டதாரிகளுக்கு ட்ரோன் தயாரிப்பு பயிற்சி
ஆதி திராவிட பட்டதாரிகளுக்கு ட்ரோன் தயாரிப்பு பயிற்சி
ADDED : செப் 04, 2025 04:29 AM
சிவகங்கை: ஆதிதிராவிடர், பழங்குடியின பட்டதாரிகளுக்கு 'ட்ரோன் தயாரிப்பு பயிற்சி' வழங்கப்படும் என சிவகங்கை தாட்கோ மேலாளர் செலினா தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:சென்னையில் உள்ள முன்னணி தொழில் நுட்ப பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, 'ட்ரோன்' தயாரிப்பு, கட்டமைப்பு, பறக்க விடும் பயிற்சி, சென்சார் சோதனை பயிற்சி, சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி, பி.இ., பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இப்பயிற்சிகளை பெற ஏதேனும் ஒரு பட்டம் மற்றும் பி.இ., இன்ஜினியரிங் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வயது 18 முதல் 35 க்குள், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இவர்களுக்கு தங்கும் விடுதி, உணவு, செலவின தொகை தாட்கோ மூலம் வழங்கப்படும். இதுபோன்ற பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடர், பழங்குடியின வகுப்பை சேர்ந்த பட்டதாரிகள் '' www.tahdco.com '' இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயன் பெறலாம், என்றார்.