/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மாவட்டத்தில் 4.16 லட்சம் கார்டுக்குபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்மாவட்டத்தில் 4.16 லட்சம் கார்டுக்குபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
மாவட்டத்தில் 4.16 லட்சம் கார்டுக்குபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
மாவட்டத்தில் 4.16 லட்சம் கார்டுக்குபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
மாவட்டத்தில் 4.16 லட்சம் கார்டுக்குபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கல்
ADDED : ஜன 11, 2024 04:11 AM

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 829 ரேஷன் கடைகளில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 610 அரிசி குடும்ப கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு, ரொக்கம் ரூ.1000, வேட்டி சேலை வழங்கும் பணியை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார்.
மாவட்டத்தில் 4.88 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களில் பொருளில்லா கார்டுதாரர்கள் தவிர்த்து அரிசி, சர்க்கரை வாங்குவோர் என கார்டுதாரர்களுக்கு 829 கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அரிசி வாங்கும் கார்டுதாரர்கள் 4 லட்சத்து 15 ஆயிரத்து 523, இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 1087 கார்டுதாரர்கள் என 4 லட்சத்து 16 ஆயிரத்து 610 கார்டுதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு, ரொக்கம் ரூ.1000, வேட்டி சேலை வழங்கும் பணி அனைத்து ரேஷன் கடைகளிலும் நேற்று துவங்கியது.
சிவகங்கை அருகே காஞ்சிரங்காலில் இத்திட்டத்தை கலெக்டர் ஆஷா அஜித் துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகன சந்திரன், கூட்டுறவு இணை பதிவாளர் கே.ஜினு, மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாபேகம் முன்னிலை வகித்தனர்.
துணை பதிவாளர் (வழங்கல்) குழந்தைவேலு, இணை பதிவாளர் பி.ஏ., நாகராஜன், கூட்டுறவு ஒன்றிய சிறப்பு அலுவலர் சரவணன், தாசில்தார் சிவராமன், வட்ட வழங்கல் அலுவலர் மகேஸ்வரன், ஊராட்சி தலைவர் மணிமுத்து, ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா, நகராட்சி தலைவர் துரைஆனந்த் பங்கேற்றனர்.
காஞ்சிரங்கால் தொடக்க கூட்டுறவு வங்கி செயலர் ராமசாமி நன்றி கூறினார்.