/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ ஆட்டுத்தோல் விற்பதில் தகராறு: 6 பேர் கைது ஆட்டுத்தோல் விற்பதில் தகராறு: 6 பேர் கைது
ஆட்டுத்தோல் விற்பதில் தகராறு: 6 பேர் கைது
ஆட்டுத்தோல் விற்பதில் தகராறு: 6 பேர் கைது
ஆட்டுத்தோல் விற்பதில் தகராறு: 6 பேர் கைது
ADDED : மே 24, 2025 11:23 PM
சிவகங்கை : சிவகங்கையில் ஆட்டுத்தோல் விற்பதில் ஏற்பட்ட தகராறில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேரை நகர் போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை பாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆசைத்தம்பி மகன் மாரி 19. இவருக்கும் கீழக்கண்டனி மணி மகன் சிவா 33 என்பவருக்கும் நேரு பஜாரில் உள்ள கறிக்கடையில் ஆட்டுத்தோல் விற்பதில் தகராறு ஏற்பட்டது.
இதில் சிவா, கீழக்கண்டனி அரவிந்த்குமார் 18, மேலவெள்ளஞ்சி பாலச்சந்தர் 19 உட்பட 4 சிறுவர்கள் மாரியை அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தனர்.
மாரி நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் அரவிந்த்குமார், பாலச்சந்தர் உட்பட 4 சிறுவர்களை கைது செய்தனர்.