ADDED : மே 24, 2025 11:22 PM
மானாமதுரை : மானாமதுரை காந்தி சிலை அருகே உள்ள யோக விநாயகர் கோயில் கட்டடம் மிகவும் சேதமடைந்ததை தொடர்ந்து கும்பாபிஷேக பணிகளுக்காக பாலாலய பூஜை நடைபெற்றது.
சிற்பி பாண்டி தலைமையிலான ஊழியர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் விநாயகருக்கு அபிஷேக, ஆராதனை, சிறப்பு பூஜை செய்தனர். ஹோமங்கள் வளர்க்கப்பட்டு பாலாலய பூஜை நடைபெற்றது. பூஜையில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.