/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/திருப்புவனம் பேரூராட்சி ஊழியர்கள் நீக்கம் கலெக்டரிடம் புகார்திருப்புவனம் பேரூராட்சி ஊழியர்கள் நீக்கம் கலெக்டரிடம் புகார்
திருப்புவனம் பேரூராட்சி ஊழியர்கள் நீக்கம் கலெக்டரிடம் புகார்
திருப்புவனம் பேரூராட்சி ஊழியர்கள் நீக்கம் கலெக்டரிடம் புகார்
திருப்புவனம் பேரூராட்சி ஊழியர்கள் நீக்கம் கலெக்டரிடம் புகார்
ADDED : ஜன 04, 2024 02:11 AM

சிவகங்கை: திருப்புவனம் பேரூராட்சியில் நீக்கப்பட்ட பெண்கள் 7 பேர் நேற்று அமைச்சர், கலெக்டரிடம் மீண்டும் வேலை வழங்க கோரி மனு அளித்தனர்.
திருப்புவனம் பேரூராட்சியில் மகளிர் குழுக்கள் மூலம் துாய்மை பணியாளர் பணிக்கு பெண்களை தேர்வு செய்தனர். நாள் ஒன்றுக்கு ரூ.316 சம்பளத்தில் 10 பேர் தேர்வு செய்தனர். அவர்களை அக்கால கட்டத்தில் சொத்து வரி சீராய்வு பணிக்காக பயன்படுத்தினர். அப்பணி முடிந்ததும், கடந்த ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் 8 பேர்களை பேரூராட்சி செயல் அலுவலர் நீக்கி உத்தரவிட்டார்.
நீக்கப்பட்ட தங்களுக்கு மீண்டும் சொத்து வரி சீராய்வு பணிக்கோ அல்லது பேரூராட்சியில் பிற பணிகளுக்கோ நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று சிவகங்கையில் அமைச்சர் பெரியகருப்பன், கலெக்டர் ஆஷா அஜித் ஆகியோரிடம் மனு அளித்தனர். மனுவை பெற்ற கலெக்டர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
துாய்மை பணிக்குவராததால் நீக்கம்
திருப்புவனம் பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ் கூறியதாவது, மகளிர் குழு மூலம் துாய்மை பணிக்கு தான் 10 பேர் எடுக்கப்பட்டனர். வரி சீராய்வு பணிக்காக அவர்களை பயன்படுத்தியுள்ளனர். சீராய்வு பணி முடிந்ததும், துாய்மை பணிக்கு செல்ல மறுத்தனர். அவர்களுடன் இணைந்த 2 பேர் துாய்மை பணியாளராக தொடர்ந்து பணிபுரிகின்றனர். இவர்கள் மறுத்ததால் நீக்கினோம், என்றார்.