/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்
கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்
கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்
கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 05, 2024 04:51 AM

சிங்கம்புணரி ;கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சிங்கம்புணரி பஸ் ஸ்டாண்ட் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வடக்கு மாம்பட்டி குரூப்பில் முறைகேடாக வழங்கிய 300 ஏக்கர் நிலங்களுக்கான பட்டாக்களை ரத்து செய்யவும், காட்டு இடையன் கண்மாய், கலுங்கு, வணங்காமுடிபட்டி கிராம கோயில் பாசன கால்வாய்கள், வடிகால்கள், பாதை, மேய்ச்சல் நிலம் ஆகியவற்றை மீட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், வாகை கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றவும் வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஏ.ஆர்.மோகன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் முத்து ராமு, மாவட்ட பொருளாளர் விஸ்வநாதன், மாவட்ட துணைச் செயலாளர் ஆறுமுகம், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சேதுராமன், மாதர் சங்க மாவட்ட செயலாளர் சாந்தி முன்னிலை வகித்தனர். வேல்முருகன், ராஜேந்திரன் பங்கேற்றனர்.