ADDED : ஜன 05, 2024 04:54 AM
திருப்புத்துார், : திருப்புத்துார் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிளை சார்பில் பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். வட்டார செயற்குழு உறுப்பினர் மார்க்ரெட் சாந்தகுமாரி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் ரெங்கராஜன் பத்து அம்ச கோரிக்கைகளை விளக்கினார்.
அரசாணை 243 ஐ அரசு ரத்து செய்தல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் குறித்து பேசினார். வட்டார பொருளாளர் சாந்தி நன்றி கூறினார்.