ADDED : பிப் 11, 2024 12:31 AM

சிவகங்கை: சிவகங்கை அரண்மனை வாசலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் ரபீக் முகமது தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் அப்துல் சித்திக், மாவட்ட பொருளாளர் முஹம்மது இஸ்மாயில் முன்னிலை வகித்தனர். மாநில பேச்சாளர் ஹமீதுர் ரஹ்மான் பேசினார்.
மாவட்ட துணை தலைவர் ஆசிப் முகமது,மாவட்டத் துணைச் செயலாளர்கள் ஹாரிஸ், ஹனிபா, சிஹாபுதீன், மாவட்ட மாணவரணி செயலாளர் வருசை முகமது, மாவட்ட வர்த்தக அணி செயலாளர் முகமது கலந்து கொண்டனர்.