தண்டவாளம் கடக்கும் பயணிகளால் ஆபத்து
தண்டவாளம் கடக்கும் பயணிகளால் ஆபத்து
தண்டவாளம் கடக்கும் பயணிகளால் ஆபத்து
ADDED : பிப் 12, 2024 05:00 AM

காரைக்குடி: காரைக்குடி ரயில் நிலையத்தில் ஆபத்தை உணராமல், தண்டவாளத்தை கடப்பதால் பயணிகளுக்கு அபாயம் நிலவுகிறது.
காரைக்குடி ரயில் நிலையம் வழியாக சென்னை, ராமேஸ்வரம், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் 30க்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. காரைக்குடியில் இருந்து சிவகங்கை, பரமக்குடி, ராமநாதபுரம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் வேலைக்காக மக்கள் அதிக அளவில் செல்கின்றனர். காரைக்குடி அழகப்பா பல்கலை., மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு ஆயிரக்கணக்கான மாணவர்களும் வருகின்றனர். முதல் பிளாட்பாரத்தில் இருந்து 2, 3 மற்றும் நான்காவது பிளாட்பாரத்திற்கு செல்வதற்கு நீண்ட தூரம் ஆகிறது. தவிர பெண்கள் சிறுவர்கள் என அனைவரும் 3 மற்றும் 4வது பிளாட்பாரத்தில் நிற்கும் ரயில்களை கண்டவுடன், ரயில் கிளம்பி விடுமோ என்ற அவசரத்தில், அவசர அவசரமாக ரயில்வே தண்டவாளத்தை கடக்கின்றனர்.