/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/காரைக்குடியில் சேதமான பாலம், மடைகள் விவசாயம் பாதிப்புகாரைக்குடியில் சேதமான பாலம், மடைகள் விவசாயம் பாதிப்பு
காரைக்குடியில் சேதமான பாலம், மடைகள் விவசாயம் பாதிப்பு
காரைக்குடியில் சேதமான பாலம், மடைகள் விவசாயம் பாதிப்பு
காரைக்குடியில் சேதமான பாலம், மடைகள் விவசாயம் பாதிப்பு
ADDED : ஜன 29, 2024 05:46 AM

காரைக்குடி: காரைக்குடி அருகே சேதமடைந்த மடைகளால் விவசாயம் பாதித்துள்ளதோடு உடைந்த பாலங்களால் விபத்து அபாயமும் நிலவுகிறது.
சாக்கோட்டை மற்றும் கல்லல் வட்டாரத்தில் 7 ஆயிரம் எக்டேருக்கும் அதிகமாக நெல் சாகுபடி செய்யப்படுகிறது.
இப்பகுதியில் உள்ள கண்மாய்கள் பலவும் தூர்வாரப்படாமல் கிடப்பதால் விவசாயம் பெருமளவில் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். விவசாயத்தின் ஆதாரமான மடைகள் பலவும் தூர்ந்தும், சேதமடைந்தும் காணப்படுகிறது.
இதனால், கண்மாய்களில் தண்ணீர் இருந்தும் விவசாய பணிகள் செய்ய முடியாமல் விவசாயிகள் திணறி வருகின்றனர். சாலையை ஒட்டி அமைந்துள்ள மடைகளில் உள்ள பாலமும் சேதமடைந்துள்ளன. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது, கண்மாய்களில் கருவேல மரங்கள் சூழ்ந்து கிடக்கின்றன.
போதிய மழையின்றி கண்மாய்களில் குறைந்த அளவே தண்ணீர் கிடக்கிறது. மடைகள் தூர்ந்து கிடப்பதால் நீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியவில்லை, என்றனர்.