ADDED : செப் 16, 2025 04:17 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே ஒக்கூர் அண்ணா நகர் ஏ காலனியை சேர்ந்தவர் வேலுச்சாமி 60.
இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் கண்ணன், சுரேஷ், பிரியன் உள்ளிட்டோருக்கு பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பிரச்னை இருந்துள்ளது.
நேற்று காலை 11:15 மணிக்கு ஒக்கூர் அண்ணா நகர் ஏ காலனி கடை வீதியில் வேலுச்சாமி நின்றார்.
அப்போது கண்ணன், சுரேஷ், பிரியன், குருசாமி உள்ளிட்டோர் அரிவாளால் வெட்டியதில் வேலுச்சாமிக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டுள்ளார்.