/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பள்ளத்துார் அருகே தொடர் மழை விவசாயப் பணிகள் தீவிரம் பள்ளத்துார் அருகே தொடர் மழை விவசாயப் பணிகள் தீவிரம்
பள்ளத்துார் அருகே தொடர் மழை விவசாயப் பணிகள் தீவிரம்
பள்ளத்துார் அருகே தொடர் மழை விவசாயப் பணிகள் தீவிரம்
பள்ளத்துார் அருகே தொடர் மழை விவசாயப் பணிகள் தீவிரம்
ADDED : செப் 20, 2025 11:44 PM

காரைக்குடி: பள்ளத்துார் அருகே தொடர் மழை காரணமாக விவசாயிகள் விவசாய பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சாக்கோட்டை வட்டாரத்தில் 4 ஆயிரத்து 500 எக்டேரில் விவசாயம் நடைபெறுகிறது.போதிய மழை இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தில் ஆர்வம் காட்டாமல் இருந்தனர். இந்நிலையில், கடந்த சில வாரங்களாக அவ்வப்போது பெய்து வரும் தொடர் மழையால் விவசாயிகள், விவசாய பணியில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர். சாக்கோட்டை வட்டாரத்தில் பல பகுதிகளிலும் விவசாயிகள் டீலக்ஸ் ரக நெல் ரகங்களை பயிரிட்டுள்ளனர். விதைப்பு பணி முடிந்து தற்போது நாற்று நடும் பணியில் விவசாயிகள் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். உழவு, உரம் விதை நெல், கூலி என ஏக்கருக்கு ரூ.25,0000 வரை விவசாயிகள் செலவு செய்து வருகின்றனர். விதைப்பு பணியைத் தொடர்ந்து, தை மாதத்தில் அறுவடை பணி நடைபெறும்.