ADDED : செப் 23, 2025 04:18 AM

தேவகோட்டை: தேவகோட்டையில் காரைக்குடி தொகுதி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
மாநில ஒருங் கிணைப்பாளர் சாயல்ராம் தலைமை வகித்தார். 2026 சட்டசபைத் தேர்தலில் நா.த.க., வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்ய வேண்டும், தொகுதி முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ராமஜெயம், குருதிக்கொடை பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் ஆனந்த், பிரேம்குமார் மற்றும் மாவட்ட செயலாளர் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.