ADDED : மே 10, 2025 07:22 AM
சிவகங்கை: திருப்புவனத்தில் இந்திய கம்யூ., ஒன்றிய குழு கூட்டம் வீராசாமி தலைமையில் நடந்தது.
மாவட்ட செயலாளர் சாத்தையா, துணை செயலாளர் மருது, மாவட்ட பொருளாளர் மணவாளன், மாவட்ட குழு சுந்தரலிங்கம், ஒன்றிய செயலாளர் மோகன் பங்கேற்றனர்.
கூட்டத்தில் திருப்புவனத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்ட வேண்டும். திருப்புவனம் பகுதியில் குற்றச்சம்பவங்கள் அதிகரிப்பதை தவிர்க்க தனியாக டி.எஸ்.பி., அலுவலகம் திறக்க வேண்டும். தீயணைப்பு நிலையம் வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றினர்.