/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா
பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா
பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா
பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா
ADDED : மே 10, 2025 07:22 AM

சிவகங்கை: புதுக்கோட்டை மவுண்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி கே.சுவேதா 596 ஆர்.கீர்த்திகா 593 எஸ்.பாலசுந்தரி 592 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மேலும் 550க்கும் அதிகமாக 52, 500க்கும் அதிகமாக 155. மாணவர்கள் பெற்று தேர்ச்சி பெற்றனர். பல பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்களில் 23 மாணவர்கள் பெற்றுள்ளனர்.
சாதனைப் படைத்த மாணவர்களை மவுண்ட் சீயோன் பள்ளிகளின் தலைவர் டாக்டர். ஜெ.ஜோனத்தன் ஜெயபரதன், பள்ளி துணைத்தலைவர் ஏஞ்சலின் ஜோனத்தன், முதல்வர் எஸ்.குமரேஷ், நிர்வாக முதல்வர் எஸ்.கிருபா ஜெபராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.