/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சாக்கோட்டை அருகே மிளகாய் செடியில் நோய் சாக்கோட்டை அருகே மிளகாய் செடியில் நோய்
சாக்கோட்டை அருகே மிளகாய் செடியில் நோய்
சாக்கோட்டை அருகே மிளகாய் செடியில் நோய்
சாக்கோட்டை அருகே மிளகாய் செடியில் நோய்
ADDED : மே 24, 2025 11:24 PM
காரைக்குடி : சாக்கோட்டை வட்டாரத்தில் மிளகாய் செடியில், பூ கருகல் நோயால் விவசாயிகள் இழப்பை சந்தித்து வருகின்றனர்.
சாக்கோட்டை ஒன்றியம், பெத்தாச்சி குடியிருப்பு, பெரியகோட்டை, மித்திரங்குடி, சிறுகப்பட்டி, வீரசேகரபுரம், பனங்குடி அரியக்குடி, இலுப்பக்குடி உட்பட பல்வேறு பகுதியிலும் கத்தரி, வெண்டை, சோளம், மிளகாய், தக்காளி உள்ளிட்டவை 20 ஏக்கருக்கும் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது.
விவசாயிகள் எப்போதும் தொடர்ச்சியாக மிளகாய் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மிளகாய்ச் செடியில் பூக்கள் பூத்து கருகி கீழே விழுவதால் விளைச்சல் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், தோட்ட பயிர்களான கத்தரி வெண்டை மற்றும் மிளகாய் தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ளது. மிளகாய் செடியில் தற்போது பூக்கள் பூத்தவுடன் கருகி விடுகிறது. சில செடிகளில் மிளகாய் காய்க்க தொடங்கிய நிலையிலேயே கருகி விடுகிறது.
இதனால், விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.