/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனத்தில் அலைபேசி திருட்டில் சிறுவர்கள் திருப்புவனத்தில் அலைபேசி திருட்டில் சிறுவர்கள்
திருப்புவனத்தில் அலைபேசி திருட்டில் சிறுவர்கள்
திருப்புவனத்தில் அலைபேசி திருட்டில் சிறுவர்கள்
திருப்புவனத்தில் அலைபேசி திருட்டில் சிறுவர்கள்
ADDED : செப் 11, 2025 06:53 AM
திருப்புவனம் : திருப்புவனத்தில் மக்களிடம் தொடர்ச்சியாக சிறுவர்கள் பலரும் கூட்டமாக சேர்ந்து அலைபேசி திருட்டில் ஈடுபட்டு வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாரம்தோறும் செவ்வாய்கிழமை வாரச்சந்தையும், தினசரி காய்கறி மார்கெட்டும் செயல்பட்டு வருகிறது. மடப்புரம் பத்ரகாளியம்மன், புஷ்பவனேஷ்வரர் கோயில் என பலவற்றிற்கும் பெண்கள், ஆண்கள் என பலரும் சென்று வருகின்றனர். தனியாக செல்பவர்களை நோட்டமிட்டு சிறுவர்கள் பலரும் கூட்டமாக சேர்ந்து அலைபேசி திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
அலைபேசி திருட்டு குறித்து புகார் அளித்தாலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. திருட்டில் ஈடுபடுவது சிறுவர்கள் என்பதால் அவர்களிடம் விசாரணை நடத்தவும், கைது செய்யவும் போலீசார் தயக்கம் காட்டுகின்றனர்.
நேற்று காலை 7:45 மணிக்கு கோயில் வீதியில் பெண் ஒருவரிடம் இருந்து சிறுவர்கள் கூட்டம் அலைபேசியை பறித்து கொண்டு தப்பியது. அதிகாலை, மாலை நேரங்களில் நடை பயிற்சி மேற்கொள்பவர்களிடமும் அலைபேசி திருட்டில் ஈடுபட்டு வருவதால் பொதுமக்கள் தனியாக நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர்.