/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம் காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம்
காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம்
காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம்
காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம்
ADDED : மே 21, 2025 05:01 AM
காரைக்குடி : காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் தேரோட்டம் நடந்தது.
காரைக்குடி கொப்புடையநாயகி அம்மன் கோயிலில் செவ்வாய் திருவிழா மே 13ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை 9:00 மணிக்கு பல்வேறு வாகனங்களில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக காலையில் அம்மன் தேருக்கு எழுந்தருளல் நடந்தது. இதில் காரைக்குடி மற்றும் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.
தொடந்து காட்டம்மன் கோயிலுக்கு அம்பாள் எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை தேர் புறப்பட்டு கொப்புடையநாயகி அம்மன் கோயில் திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. மே 22ம் தேதி மாலை தெப்பத்திருவிழாவும் மறுநாள் அதிகாலை புஷ்ப பல்லக்கும் நடைபெறுகிறது.