நுாற்றாண்டு விழா விளையாட்டு போட்டி
நுாற்றாண்டு விழா விளையாட்டு போட்டி
நுாற்றாண்டு விழா விளையாட்டு போட்டி
ADDED : ஜன 07, 2024 04:28 AM
சிவகங்கை; முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவினை முன்னிட்டு வரும் ஜன.10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டத்தில் 15 வயதிற்கு மேற்ப்பட்டவர்கள் மற்றும் 25 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கான கபடி, கால்பந்து, கையுந்துபந்து உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் ஜன.10ம் தேதியும், ஆண்களுக்கான கபடி, கால்பந்து, கையுந்துபந்து விளையாட்டு போட்டிகள் சிவகங்கை மாவட்ட விளையாட்டு அரங்கில் ஜன.11ம் தேதியும் நடைபெற உள்ளது.
இப்போட்டியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள அணிகள் தங்கள் அணி பெயர்களை மாவட்ட விளையாட்டு அரங்க 04575 299293 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.
போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்,வீராங்கனைகள் வயது சான்று அல்லது ஆதார் கார்டு நகல் பெற்று வர வேண்டும். வெற்றி பெறும் அணிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களது பெயர்களை வரும் ஜன.8 மாலை 6:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கில் பதிவு செய்யவேண்டும்.