Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புவனம் நிதி நிறுவனங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை

திருப்புவனம் நிதி நிறுவனங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை

திருப்புவனம் நிதி நிறுவனங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை

திருப்புவனம் நிதி நிறுவனங்களில் சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை

ADDED : செப் 20, 2025 10:46 PM


Google News
திருப்புவனம்:திருமங்கலம் பேராசிரியை நிகிதாவின் நகை திருட்டு தொடர்பாக சி.பி.ஐ., அதிகாரிகள் திருப்புவனம் பகுதியில் உள்ள நிதி நிறுவனங்களில் விசாரணை நடத்தினர்.

மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்தவர் நிகிதா 42, திண்டுக்கல் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். ஜூன் 27ல் தனது தாயார் சிவகாமியுடன் மடப்புரம் கோயிலுக்கு சாமி கும்பிட காரில் வந்தார்.

கோயில் வாசலில் பாதுகாப்பிற்கு நின்றிருந்த ஊழியர் அஜித்குமார் உதவியுடன் 29, காரை பார்கிங்கில் நிறுத்தினார். சாமி கும்பிட்டு விட்டு வந்த போது காரில் இருந்த ஒன்பதரை பவுன் தங்க நகை மற்றும் இரண்டாயிரத்து 500 ரூபாய் ரொக்கம் மாயமானது.

மானாமதுரை குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் ராஜா, கண்ணன், சங்கரமணிகண்டன், பிரபு, ஆனந்த் ஆகியோர் விசாரணையின் போது அஜித்குமார் உயிரிழந்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து அஜித்குமார் இறப்பு குறித்து ஆகஸ்ட் 20ல் அறிக்கை சமர்ப்பித்தனர்.

நகை திருட்டு சம்பவத்தையும் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து செப்டம்பர் முதல் விசாரிக்கின்றனர்.

கோயில் ஊழியர்கள் மற்றும் கார் பார்க்கிங்கை சுற்றியுள்ள கடைகள், வீடுகளில் விசாரணை நடத்திய பின் இரு நாட்களாக திருப்புவனத்தில் உள்ள நிதி நிறுவனங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூன் 27க்கு பிறகு நிதி நிறுவனங்களில் தங்க நகை அடமானம் வைத்தவர்கள், நகைகளை திருப்பியவர்கள் உள்ளிட்ட விபரங்களை மூன்று பேர் கொண்ட சி.பி.ஐ.,குழு ஆய்வு செய்து வருகிறது. தனியார் நிதி நிறுவனங்களில் நகை அடமானம் வைக்கும் போது நகை மற்றும் அடமானம் வைப்பவர்களையும் படம் எடுத்து கணினியில் பதிவு செய்வது வழக்கம். எனவே அதன்படி விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us