ADDED : ஜன 05, 2024 04:58 AM
காரைக்குடி : காரைக்குடியில் உள்ள உமையாள் ராமநாதன் மகளிர் கல்லுாரியில் மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் தலைமை வகித்து பேசினார். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் வரவேற்றார்.
கல்லுாரி முதல்வர் ஹேமமாலினி வாழ்த்தினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பயிற்சி வகுப்பு உதவி இயக்குனர் ஹரி பாஸ்கர், உதவி பேராசிரியர் அழகு, மாவட்ட தொழில் மைய உதவி இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராஜலட்சுமி பேசினர். பேராசிரியர் சுந்தரி நன்றி கூறினார்.