ADDED : ஜன 03, 2024 06:19 AM
காரைக்குடி: பள்ளத்துார் பேரூராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தொடங்கி வைத்தார். பேரூராட்சி தலைவி சாந்தி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் பாலசுப்ரமணியன், பேரூராட்சி துணைத் தலைவர் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
சமூக பாதுகாப்புத் துறை தாசில்தார் செல்வராணி, தனி தாசில்தார்கள் கண்ணன், புஷ்பலீலா ஒருங்கிணைத்தனர்.