/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/கேந்திரியா வித்யாலயா பள்ளி பெண்கள் பாத்ரூமில் கேமராகேந்திரியா வித்யாலயா பள்ளி பெண்கள் பாத்ரூமில் கேமரா
கேந்திரியா வித்யாலயா பள்ளி பெண்கள் பாத்ரூமில் கேமரா
கேந்திரியா வித்யாலயா பள்ளி பெண்கள் பாத்ரூமில் கேமரா
கேந்திரியா வித்யாலயா பள்ளி பெண்கள் பாத்ரூமில் கேமரா
ADDED : ஜன 25, 2024 05:16 AM
பூவந்தி: பூவந்தி அருகே இலுப்பக்குடியில் இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி முகாம் உள்ளது. பயிற்சி மைய வளாகத்திலேயே கேந்திரியா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. பயிற்சி மைய அதிகாரிகள், ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஆகியோரின் குழந்தைகள் இங்கு கல்வி பயில்கின்றனர்.
250 மாணவ, மாணவியர்கள் உள்ள இந்த பள்ளியின் முதல்வராக தினகரன் உள்ளார். நேற்று முன்தினம் பெண்கள் பாத்ரூமில் அலைபேசி கேமரா ஆன் செய்யப்பட்டு ஒளித்து வைக்கப்பட்டிருந்துள்ளது. இதனை கண்ட மாணவிகள் முதல்வரிடம் தகவல் சொல்லியுள்ளனர். முதல்வர் அந்த செல்போன் கேமராவை கைப்பற்றி பூவந்தி போலீசில் புகார் செய்தார்.
எஸ்.பி., அரவிந்தன், டி.எஸ்.பி., கண்ணன் மற்றும் போலீசார் நேற்று பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று மாலை வரை வழக்கு பதிவு செய்யப்படவில்லை.