ADDED : ஜூன் 02, 2025 12:31 AM

சிவகங்கை: மதகுபட்டியில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடந்தது. பெரியமாடு பிரிவில் 14 மாட்டு வண்டிகளும், சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 27 வண்டிகளும் பங்கேற்றன.
சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 41 பந்தய மாட்டு வண்டிகள் பங்கேற்றன. பெரியமாட்டு பிரிவுக்கு 8 கிலோமீட்டர் தொலைவும், சிறிய மாட்டு பிரிவிற்கு 6 கிலோ மீட்டர் தொலைவும் பந்தய எல்லையாக நிர்ணயித்தனர். பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டியின் உரிமையாளர்களுக்கும் அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது.