Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயிலில்  செப். 24ல் பிரம்மோற்ஸவ விழா துவக்கம் 

நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயிலில்  செப். 24ல் பிரம்மோற்ஸவ விழா துவக்கம் 

நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயிலில்  செப். 24ல் பிரம்மோற்ஸவ விழா துவக்கம் 

நாட்டரசன்கோட்டை பெருமாள் கோயிலில்  செப். 24ல் பிரம்மோற்ஸவ விழா துவக்கம் 

ADDED : செப் 11, 2025 07:08 AM


Google News
சிவகங்கை : நாட்டரசன்கோட்டை அலர்மேல் மங்கா சமேத வெங்கடாஜலபதி பெருமாள் கோயில் பிரம்மோற்ஸவ விழா செப்., 24ல் துவங்குகிறது.

சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட நாட்டரசன்கோட்டை அலர்மேல் மங்கா சமேத வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் பிரம்மோற்ஸவ விழா செப்., 24 அன்று இரவு 7:00 மணிக்கு அனுக்கை, வாஸ்து சாந்தியுடன் துவங்குகிறது. செப்., 25 அன்று காலை 9:40 மணி முதல் 11:20 மணிக்குள் கொடியேற்றத்துடன் புரட்டாசி பிரம்மோற்ஸவ விழா துவங் குகிறது. தினமும் ஸ்ரீதேவி, பூதேவியருடன் வெங்கடாஜலபதி பெருமாள் சிம்மம், அனுமன், தங்க கருட சேவை, சேஷ வாகனம், வெள்ளி கேடயம், குதிரை, புன்னை மர வாகனங்களில் இரவு திருவீதி உலா வருகிறார். செப்., 30 அன்று காலை 11:00 முதல் மதியம் 12:00 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெறும்.

அக்., 3 ல் புரட்டாசி தேரோட்டம் அக்., 3 ம் தேதி காலை 9:10 மணி முதல் 10:25 மணிக்குள் தேரோட்டம் நடைபெறும். அக்., 4 அன்று காலசந்தி, திருவீதி உலா நடைபெறும். அதனை தொடர்ந்து கண்ணுடைய நாயகி அம்மன் தெப்பக்குளத்தில் தீர்த்தவாரி உற்ஸவம் நடைபெறும். அக்., 5 ம் தேதி ஊஞ்சல் உற்ஸவத்துடன் பிரம்மோற்ஸவ விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாட்டை கோயில் கண்காணிப்பாளர் எஸ்.கணபதிராமன், கவுரவ கண்காணிப்பாளர் கருப்பையா ஆகியோர் செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us