/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பா.ஜ., தனியாக தேர்தலை சந்தித்தால் தான் அவர்களது பலம் தெரியும்: கார்த்தி எம்.பி.,பா.ஜ., தனியாக தேர்தலை சந்தித்தால் தான் அவர்களது பலம் தெரியும்: கார்த்தி எம்.பி.,
பா.ஜ., தனியாக தேர்தலை சந்தித்தால் தான் அவர்களது பலம் தெரியும்: கார்த்தி எம்.பி.,
பா.ஜ., தனியாக தேர்தலை சந்தித்தால் தான் அவர்களது பலம் தெரியும்: கார்த்தி எம்.பி.,
பா.ஜ., தனியாக தேர்தலை சந்தித்தால் தான் அவர்களது பலம் தெரியும்: கார்த்தி எம்.பி.,
ADDED : பிப் 24, 2024 12:25 AM
காரைக்குடி:''பா.ஜ., தனியாக தேர்தலை சந்தித்தால் தான் அவர்களது பலம் தெரியும்,'' என சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
காங்., தமிழக தலைவராக செல்வப்பெருந்தகைக்கு அனைத்து தகுதியும் உள்ளது. பா.ஜ., தன்னை எதிர்ப்பவர்களிடம் அடக்குமுறையை கையாளுகிறது. இந்திய அளவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். என்னை காணவில்லை என போஸ்டர் ஒட்டிய கட்சி இப்பகுதியில் உள்ளதாக எனக்கு தெரியவில்லை. போஸ்டர் அடித்தவர் பெயரை இப்பகுதியில் நான் கேள்விப்பட்டதே இல்லை. லெட்டர் பேடு கட்சிகளை தேர்தல் ஆணையம் ஒடுக்க வேண்டும்.
தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு சுமூகமாக முடியும். எம்.பி.,க்கு பெரிய அளவில் அதிகாரம் இல்லையென்றாலும் என்னால் முடிந்த அளவுக்கு 6 சட்டசபை தொகுதிகளுக்கும் நிதியை சமமாக பகிர்ந்து நலத்திட்ட உதவிகளை செய்துள்ளேன். வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களுக்கு ஓட்டுரிமை அளிக்க வேண்டும் என்று மசோதா தாக்கல் செய்துள்ளேன். பா.ஜ., ஆட்சியில் மீனவர்கள் பிரச்னை தீர்க்கப்படவில்லை.
பா.ஜ., ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் விலைவாசி அதிகரித்து உள்ளது. இதற்கு ஜி.எஸ்.டி., தான் காரணம். தேர்தல் நேரத்தில் கட்சிக்குள் கருத்து வேறுபாடு இருக்கும். எந்தத் தொகுதி யாருக்கு என்பதை தி.மு.க., முடிவு செய்யும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர செயல்பாடுகளில் எனக்கு சந்தேகம் இல்லை. மற்ற கட்சியில் உள்ளவர்களுக்கு சந்தேகம் உள்ளது. அதை போக்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் கடமை.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கனவாக தான் உள்ளது. திராவிட கட்சிகளை ஒதுக்கி விட்டு தமிழக அரசியலில் மற்ற கட்சிகள் வெற்றி பெறுவது சிரமம். பா.ஜ., சத்தம், ஆவேசத்துடன் செயல்படுவதால் ஆதரவு இருப்பதாக ஒரு மாயை உருவாக்குகிறார்கள். இதுதேர்தலில் பெறும் ஓட்டுகள் மூலம் தெரியும் என்றார்.