ADDED : பிப் 05, 2024 11:49 PM
மானாமதுரை : மானாமதுரை ராஜ கம்பீரம் பகுதியில் அரசு ஐ.டி.ஐ., தனியார் கட்டடத்தில் துவங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மானாமதுரை சிவகங்கை ரோட்டில் ஐ.டி.ஐ.,க்கு புதிய கட்டடத்திற்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு நடைபெற்ற பூமி பூஜை விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். அமைச்சர் பெரியகருப்பன் பூமி பூஜையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,தமிழரசி,ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவராமன், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்கள் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் கர்ணன்,மானாமதுரை ஐ.டி.ஐ., முதல்வர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.