Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/போலி விசா மூலம் வெளிநாடு செல்வோர் உஷார்! தமிழக அளவில் 3வது இடத்தில் சிவகங்கை

போலி விசா மூலம் வெளிநாடு செல்வோர் உஷார்! தமிழக அளவில் 3வது இடத்தில் சிவகங்கை

போலி விசா மூலம் வெளிநாடு செல்வோர் உஷார்! தமிழக அளவில் 3வது இடத்தில் சிவகங்கை

போலி விசா மூலம் வெளிநாடு செல்வோர் உஷார்! தமிழக அளவில் 3வது இடத்தில் சிவகங்கை

ADDED : ஜூன் 24, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
தமிழகத்தில் இருந்து சவுதி, மலேசியா, சிங்கப்பூர், ஈரான், துருக்கி போன்ற நாடுகளுக்கு உயர்கல்வி, வேலை வாய்ப்பிற்காக இளைஞர்கள் செல்கின்றனர். வேலைக்காக வெளிநாடு செல்வோர் பட்டியலில் தமிழகத்தில் முதலிடத்தில் விழுப்புரம், இரண்டாம் இடத்தில்கன்னியாகுமரி, மூன்றாம் இடத்தில் சிவகங்கை மாவட்டம் உள்ளது.

இம்மாவட்டத்தில் சிவகங்கை, புளியடித்தம்பம், காரைக்குடி ஆகிய 3 இடங்களில் மட்டுமே அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜன்ட்கள் உள்ளனர்.

மற்ற இடங்களில் வெளிநாடு அனுப்புவதாககூறி போலி ஏஜன்ட்கள்நபருக்கு ரூ.3 லட்சம் வரை வசூலித்து, அவர்களை போலி விசாவில்அனுப்பி, அங்கு அவர்களை சிக்கலுக்கு உள்ளாக்கி விடுகின்றனர்.

சிவகங்கையில் இருந்து போலி விசா மூலம் வெளிநாடு சென்று வேலை கிடைக்காமலும், தங்க இடமின்றி பாஸ்போர்ட்டை பறி கொடுத்து , நாட்டிற்கு திரும்ப முடியாமல் பலர் தவித்து வருகின்றனர். வெளிநாடு சென்ற சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்களின் குடும்பம் மூலம் மாதத்திற்கு 60 முதல் 100 மனுக்கள் மீட்டுதரக்கோரி வருகின்றன.

எனவே வெளிநாடு அனுப்புவதாக கூறி பல லட்சம் வசூல் செய்து போலி விசா வழங்கும் போலி ஏஜன்ட்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என போலீசார் வலியுறுத்தி வருகின்றனர்.

போலி ஏஜன்ட்கள் உஷார்


அதிகாரி கூறியதாவது:

இளைஞர்கள், பட்டதாரிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தான், மாவட்ட வாரியாக புலம்பெயர் தமிழர் நலன் சார்ந்த அலுவலகம் செயல்படுகிறது. அங்கு சென்று பதிவு செய்தால், வெளிநாடு செல்பவர்களுக்கு உரிய மொழி கற்கும் பயிற்சி அளிக்கப்படும்.

மேலும் வெளிநாடு அனுப்பும் ஏஜன்ட்டும் அரசிடம் பதிவு செய்துஉள்ளாரா என்பது குறித்து www.emigrate.gov.in இணையதளத்தில் பார்த்து உறுதி செய்யலாம். இதன் மூலம் போலி விசாவில் வெளிநாடு சென்று அங்கு சிக்கி தவிப்பதை தவிர்க்கலாம்.

மேலும் உரிய மருத்துவ காப்பீடு எடுத்து வேலைக்கு சென்றால், அதற்கான இழப்பீடும் பெறலாம். சிவகங்கையில் சிலர் மட்டுமே அரசின் அனுமதிபெற்ற ஏஜன்ட்கள்.

ஆனால், 300 க்கும் மேற்பட்ட போலி ஏஜன்ட்கள் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வெளிநாடு சென்று, சிக்கி கொண்ட விவரம் தெரியவந்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us