/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ சிவகங்கை மருத்துவமனையில் எக்கோ டாக்டர் இல்லை சிவகங்கை மருத்துவமனையில் எக்கோ டாக்டர் இல்லை
சிவகங்கை மருத்துவமனையில் எக்கோ டாக்டர் இல்லை
சிவகங்கை மருத்துவமனையில் எக்கோ டாக்டர் இல்லை
சிவகங்கை மருத்துவமனையில் எக்கோ டாக்டர் இல்லை
ADDED : ஜூன் 24, 2024 11:48 PM
சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எக்கோ பரிசோதனை செய்ய இருந்த ஒரு டாக்டரும் பணி மாறுதலில் மதுரைக்கு சென்றதால் டாக்டர் இல்லாமல் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எக்கோ பரிசோதனைக்கு நிரந்தர டாக்டர் இல்லை. வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் மட்டுமே இது வரை பரிசோதனை நடந்தது. இங்கு இருந்த டாக்டர் 3 நாட்கள்சிவகங்கையிலும், 3 நாட்கள் மதுரையிலும் பணி செய்வார்.
இதனால் சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எக்கோ பரிசோதனை மையத்தில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. தற்போது 3 நாட்கள் மட்டுமே வந்த டாக்டரும் பணி மாறுதலில் நிரந்தரமாகவே மதுரைக்கு சென்றதால் எக்கோ பரிசோதனை மையம் இயங்க முடியாத சூழல் உள்ளது.
மருத்துவ கண்காணிப்பாளர் குமரவேல் கூறுகையில், இங்கு பணியில் இருந்த இரண்டு டாக்டர்களில் ஒருவர் நீண்டவிடுப்பில் உள்ளார்.ஒருவர் பணி மாறுதலில் சென்றுவிட்டார். இது குறித்து அரசுக்கு கடிதம் வைத்துள்ளோம். ஓரிரு தினங்களில் டாக்டர் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.