ADDED : மார் 28, 2025 05:35 AM
காரைக்குடி: பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான மாநில கவிதை போட்டி நடந்தது.
இதில், அரியக்குடி அரசுப் பள்ளி பிளஸ் 1 மாணவி சண்முக ஷிவானி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு இளம் கவிஞர் விருதும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
சென்னை கோட்டூர்புரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாணவிக்கு விருதை வழங்கினார்.
மாணவியை தலைமை ஆசிரியர் பிரிட்டோ மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாராட்டினர்.