ADDED : ஜூன் 05, 2025 01:19 AM
காரைக்குடி: காரைக்குடியில் அஞ்சல் துறை சார்பில் கோட்ட அளவிலான விருது வழங்கும் விழா நடந்தது. கோட்ட கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் தலைமையேற்றார்.
காரைக்குடி வர்த்தக சங்க தலைவர் சாமி திராவிட மணி, செயலாளர் கண்ணப்பன் கலந்து கொண்டனர். உப கோட்ட ஆய்வாளர் ரித்தேஷ் சவுக்கான் வரவேற்றார். முதுநிலை மேலாளர் பிரியன் பேசினார். கடந்த நிதியாண்டில் சிறப்பாக பணியாற்றிய அஞ்சல் ஊழியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.