/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தொலைநோக்கி கருவி மூலம் வானியல் நிகழ்ச்சி பார்வைதொலைநோக்கி கருவி மூலம் வானியல் நிகழ்ச்சி பார்வை
தொலைநோக்கி கருவி மூலம் வானியல் நிகழ்ச்சி பார்வை
தொலைநோக்கி கருவி மூலம் வானியல் நிகழ்ச்சி பார்வை
தொலைநோக்கி கருவி மூலம் வானியல் நிகழ்ச்சி பார்வை
ADDED : பிப் 05, 2024 11:53 PM
சிவகங்கை : சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில், மாவட்ட நிர்வாகம், கல்வி, நுாலகத்துறை, பபாசியுடன் இணைந்து புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்று வருகிறது. பள்ளி மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை துாண்டும் விதமாக தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலம் கோளரங்கம் அமைத்துள்ளனர். அங்கு தொலைநோக்கி கருவி மூலம் வானில் நடக்கும் நிகழ்வுகளையும், கோள்கள், துணை கோள்களை தெளிவாக கண்டு ரசித்தனர். அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி, வானோக்கி அறிவியல் சார்ந்த விளக்கம் அளித்தார். ஆரோக்கியமேரி, முத்துக்குமார், ராஜசரவணன், அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் ஏற்பாட்டை செய்திருந்தனர்.
* தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் புத்தக கண்காட்சியில் நையாண்டி மேளம், கரகம், பொய்க்கால் குதிரை ஆட்டம், மரக்கால் ஆட்டம், சிலம்பம், தோல்பாவை கூத்து, பரதநாட்டியம், காவடி ஆட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை நடத்தினர். மாவட்ட சுற்றுலா அலுவலர் ஏ.சங்கர் ஏற்பாடுகளை செய்திருந்தார்.