ADDED : மார் 16, 2025 12:33 AM
காரைக்குடி; பள்ளத்துாரில் ஆயுதங்களுடன் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பள்ளத்தூரில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை செய்தபோது காரைக்குடியைச் சேர்ந்த அகிலன் 23, விஸ்வநாதன்20, வெங்கடேசன் 26, புதுக்கோட்டை பாண்டியன் ஆகியோர் ஆயுதங்களுடன் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் 2019ம் ஆண்டு குன்றக்குடியில் நடந்த கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கோயில் திருவிழாவின்போது கொலை செய்ய திட்டம் தீட்டியது தெரியவந்தது. அந்த நான்கு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து ஆயுதங்களை பறிமுதல் செய்தனர்.