/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/5000 கயிறுகளால் தயாரான அரியக்குடி கோயில் தேர்வடம்5000 கயிறுகளால் தயாரான அரியக்குடி கோயில் தேர்வடம்
5000 கயிறுகளால் தயாரான அரியக்குடி கோயில் தேர்வடம்
5000 கயிறுகளால் தயாரான அரியக்குடி கோயில் தேர்வடம்
5000 கயிறுகளால் தயாரான அரியக்குடி கோயில் தேர்வடம்
ADDED : ஜன 04, 2024 02:15 AM

சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் 5 ஆயிரம் கயிறு களை கொண்டு 300 அடி நீளத்தில் அரியக்குடி கோவிலுக்கு 2 தேர் வடம் தயாரித்து அனுப்பப்பட்டது.
சிங்கம்புணரியில் இருந்து பல்வேறு கோயில்களுக்கு தேர் வடம் தயாரிக்கப்படுகின்றன. காரைக்குடி அருகே அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் தேரோட்டத்திற்கான வடக்கயிறு தயாரிக்க சிங்கம்புணரியில் ஆர்டர் கொடுக்கப்பட்டது. சேவுகப்பெருமாள் கோயில் ரத வீதியில் 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 10 நாட்களாக வடக்கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கோகிலா நல்லதம்பி, தேர் வட தயாரிப்பாளர்; இங்கிருந்து பல்வேறு மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு பல்வேறு நீளங்களில் வடக்கயிறுகளை தயாரித்து அனுப்புகிறோம். இதுவரை 500 அடி நீளம் வரை தயாரித்துள்ளோம். தற்போது அரியக்குடி கோயிலுக்கு 16 இன்ச் அகலத்தில் தலா 300 அடி நீளம் கொண்ட இரண்டு தேர் வட கயிறுகளை தயாரித்து அனுப்புகிறோம். இதற்காக 5 ஆயிரம் கயிறுகளை பயன்படுத்தியுள்ளோம். வடம் தயாரிப்பில் பெண்களே அதிகம் ஈடுபடுகிறோம். கயிறை முறுக்க மட்டும் ஆண் தொழிலாளர்கள் உதவுகிறார்கள். அனைவரும் பக்தியுடன் விரதம் இருந்தே தேர் வடம் தயாரிப்பில் ஈடுபடுவோம்.