ADDED : செப் 16, 2025 04:18 AM
சிவகங்கை: சிவகங்கையில் சுப்ரீம் லயன்ஸ் சங்கம் சார்பில் நல்லாசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சங்க தலைவர் வழக்கறிஞர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் சுந்தரபாண்டியன், பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். லயன்ஸ் சங்க நிர்வாகி ஜான்பிரிட்டோ வாழ்த்துரை வழங்கினார். விழாவில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களை பாராட்டி, பொன்னாடை அணிவித்தனர்.