ADDED : ஜன 30, 2024 11:37 PM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணி செய்ய ஓய்வு பெற்ற போலீசார் மற்றும் முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எஸ்.பி., அர்விந்த் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் பணிபுரிய விருப்பம் உள்ள ஓய்வு பெற்ற போலீசார் சிவகங்கை மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் இயங்கும் தேர்தல் பிரிவு அலுவலகத்தை அணுகி தங்களது விருப்ப மனுவை அளிக்குமாறும், முன்னாள் படைவீரர்கள், சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரர் நலவாரிய அலுவலகத்தை அணுகி தங்களது விருப்ப மனுவை அளிக்கலாம் என்றும், தேர்தல் பணிபுரியும் நாட்களில் தமிழக அரசால் வழங்கப்படும் உணவுப்படி வழங்கப்படும் என்றார்.