Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ திருப்புத்துாரில் ஆனி திருமஞ்சனம்

திருப்புத்துாரில் ஆனி திருமஞ்சனம்

திருப்புத்துாரில் ஆனி திருமஞ்சனம்

திருப்புத்துாரில் ஆனி திருமஞ்சனம்

ADDED : ஜூலை 04, 2025 02:54 AM


Google News
Latest Tamil News
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு நடராஜர் புறப்பாடு நடந்தது.

குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயில் இறைவன் கவுரி தாண்டவம் நிகழ்த்திய தலமாகும்.

ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு உற்ஸவ நடராஜர் -சிவகாமி அம்மன் ஆடல் வல்லான் சன்னதி முன்பாக திருச்சபையில் எழுந்தருளினர். தொடர்ந்து சிவாச்சார்யார்களால் பூஜை, அபிேேஷகம் நடந்தது.

பின்னர் அலங்காரத்தில் மூலவருக்கும், உற்ஸவருக்கும் தீபாராதனை நடந்தது. முதலாம் மற்றும் இரண்டாம் பிரகாரங்களில் சுவாமி- அம்பாள் வலம் வந்தனர். ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us