ADDED : பிப் 24, 2024 05:01 AM
காரைக்குடி : கல்லல் வட்டாரத்தில் அட்மா விரிவாக்க சீரமைப்பு திட்டத்தின் கீழப்பூங்குடி ஊராட்சியில் வேளாண் கிராமிய நிகழ்ச்சி நடந்தது.
ஊராட்சி தலைவி சுந்தரவள்ளி தலைமையேற்றார். வேளாண் உதவி இயக்குனர் அழகு ராஜா முன்னிலை வகித்தார். இதில் மாற்றுப்பயிர் சாகுபடி முக்கியத்துவம் மற்றும் சிறுதானிய சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளிடம் பேசினார். இதில் கிராமிய பாடல்கள் தப்பாட்டம் பொய்க்கால் ஆட்டம், கரகாட்டம் ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண் திட்டங்கள் மானிய விலையில் வழங்கும் இடுபொருட்கள் குறித்து விளக்கப்பட்டது. வேளாண் அலுவலர் பாலகணபதி வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பழகன் பேசினர்.