/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ தண்ணீர் சீராக செல்வதை தடுக்கும் நாணல் செடி தண்ணீர் சீராக செல்வதை தடுக்கும் நாணல் செடி
தண்ணீர் சீராக செல்வதை தடுக்கும் நாணல் செடி
தண்ணீர் சீராக செல்வதை தடுக்கும் நாணல் செடி
தண்ணீர் சீராக செல்வதை தடுக்கும் நாணல் செடி
ADDED : ஜூன் 28, 2025 11:39 PM

மானாமதுரை: மானாமதுரை பகுதி வைகை ஆற்றில் நாணல் செடிகள் அதிக அளவில் வளர்ந்துள்ளதால் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் சீராக செல்ல முடியவில்லை.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மாவட்ட தேவைக்காக 2 நாட்களுக்கு முன் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வைகை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மானாமதுரை அருகே இடைக்காட்டூரை மெதுவாக கடந்து சென்றது.
ஆற்றில் எங்கு பார்த்தாலும் நாணல்கள் வளர்ந்துஉள்ளதால் ஆற்றின் ஒரு ஓரத்தில் மட்டும் தண்ணீர் சென்று வருகிறது. குறிப்பிட்ட நாட்களுக்குள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தண்ணீர் சென்றடையுமா என்ற சந்தேகம் எழுந்துஉள்ளது.
விவசாயிகள் கூறியதாவது:
சிவகங்கை மாவட்ட வைகை பூர்வீக பாசன விவசாய பகுதி வேதியரேந்தல் பார்த்திபனூர் மதகு அணை வரை உள்ள நிலையில் மதுரை பகுதியில் இருந்து எங்கு பார்த்தாலும்வைகை ஆற்றுக்குள் நாணல்செடிகளும், கருவேல மரங்களும் வளர்ந்துள்ளதால் தண்ணீர் சீராக செல்வதில் சில வருடங்களாக சிக்கல் ஏற்பட்டு வருகிறது.
இது குறித்து பொதுப்பணித்துறை நீர்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை கூறியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை ஐகோர்ட் கிளையும் வைகை ஆற்றை சுத்தம் செய்ய வேண்டும் என்று 5 மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இருப்பினும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தற்போது திறந்து விடப்பட்ட தண்ணீர் நாணல் செடிகள் மற்றும் கருவேல மரங்களால் சீராக செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.