/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/ புதிதாக போடப்பட்டும் காணாமல் போன ரோடு புதிதாக போடப்பட்டும் காணாமல் போன ரோடு
புதிதாக போடப்பட்டும் காணாமல் போன ரோடு
புதிதாக போடப்பட்டும் காணாமல் போன ரோடு
புதிதாக போடப்பட்டும் காணாமல் போன ரோடு
ADDED : ஜூன் 28, 2025 11:39 PM

காரைக்குடி: காரைக்குடி மாநகராட்சியில் காவிரி குடிநீர் திட்ட பணி காரணமாக புதிதாக போடப்பட்ட சாலை, காணாமல் போனதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
காரைக்குடி மாநகராட்சியில், வீடுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் கிடைத்திடும் வகையில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது.
மாநகராட்சியில் உள்ள 7 வார்டுகளில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் காரைக்குடி, 29 வது வார்டு ஆலங்குடி யார் வீதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக சாலை போடப்பட்டது.
தற்போது குடிநீர் குழாய் பதிப்பு காரணமாக, பாதி சாலை தோண்டப்பட்டு பணிகள் நடந்தது. பணி முடிந்து சாலைகள் சரி செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டுள்ளது.