ADDED : ஜன 30, 2024 11:48 PM
காரைக்குடி : கல்லல் அருகேயுள்ள தேவபட்டு கிராமத்தில், ஆண்டுதோறும் அந்தரநாச்சியம்மனுக்கு செவ்வாய் பொங்கல் விழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு நடைபெறும்.
நேற்று, நடந்த மஞ்சுவிரட்டில் 200க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில், மஞ்சுவிரட்டை வேடிக்கை பார்த்த சாத்தரசம்பட்டியை சேர்ந்த அழகர்சாமி மகன் பூமிநாதன் 39 என்பவரை மாடு முட்டியதில் காயமடைந்தார். சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.