Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை அருகே இரும்பு கம்பியால் தாக்கி 60 பவுன், பணம் கொள்ளை வழக்கு: கைது 2

சிவகங்கை அருகே இரும்பு கம்பியால் தாக்கி 60 பவுன், பணம் கொள்ளை வழக்கு: கைது 2

சிவகங்கை அருகே இரும்பு கம்பியால் தாக்கி 60 பவுன், பணம் கொள்ளை வழக்கு: கைது 2

சிவகங்கை அருகே இரும்பு கம்பியால் தாக்கி 60 பவுன், பணம் கொள்ளை வழக்கு: கைது 2

ADDED : பிப் 23, 2024 10:26 PM


Google News
Latest Tamil News
சிவகங்கை:சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே கல்லுவழியில் இரும்பு ராடுடன் வீட்டிற்குள் புகுந்து 5 பேரை தலையில் தாக்கி, பீரோவில் இருந்த 60 பவுன், பணத்தை கொள்ளையடித்த இருவரை 28 நாட்களில் போலீசார் நேற்று கைது செய்தனர்.

காளையார்கோவில் அருகே கல்லுவழி மரக்கடை உரிமையாளர் சின்னப்பன் 70. இவர் மனைவி உபகாரமேரி 65. இவர்களுக்கு ஜேக்கப் ஜெயபாரி, குமார் ஆகிய இரு மகன், ஒரு மகள் உள்ளனர். இரு மகன்களும் துபாயில் உள்ளனர். ஜேக்கப் ஜெயபாரியின் மனைவி வேதபோதக அரசி 30, மகள் 8 ம் வகுப்பு படிக்கும் ஜெர்லின் 12, மகன் 5 ம் வகுப்பு படிக்கும் ஜோபின் 10, ஆகிய 5 பேரும் கல்லுவழியில் உள்ள சின்னப்பன் வீட்டில் கூட்டுகுடும்பமாக வசிக்கின்றனர். பிப்., 26 அதிகாலை 2:00 முதல் 3:00 மணிக்குள், இரும்பு ராடுடன் சின்னப்பன் வீட்டிற்குள் புகுந்த நபர்கள், சின்னப்பன் உட்பட 5 பேரின் தலையில் பலமாக தாக்கி, மயக்கமடைய செய்தனர். பின்னர் பீரோவில் இருந்த 60 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

பிப்., 26 அன்று காலை 7:00 மணிக்கு மயக்கம் தெளிந்த சிறுவன் ஜோபின், உறவினருக்கு அலைபேசியில் தகவல் தெரிவித்த பின்னரே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தலையில் காயமுற்ற 5 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல்சிகிச்சைக்காக மதுரை தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று திரும்பினர். இவர்களுக்கான மருத்துவ செலவினை அமைச்சர் பெரியகருப்பன் ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் தொடர் சம்பவங்கள் நடைபெறுவதால், அதிருப்தியான காளையார்கோயிலை சேர்ந்தவர்கள் மறியலில் ஈடுபட்டனர். பா.ஜ., உட்பட பல்வேறு கட்சியினர் இச்சம்பவத்தை கண்டித்தும், போலீசாரை கண்டித்தும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். சிவகங்கை எஸ்.பி., பி.கே.அர்விந்த் தலைமையில் 8 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் தனிப்படை போலீசார் தேவகோட்டை அருகே தென்னீர்வயலில் பதுங்கியிருந்த அக்கிராமத்தை சேர்ந்த தினேஷ்குமார் 30, கணபதி 32, இருவரையும் கைது செய்தனர்.

இருவரிடம் தொடர் விசாரணை


எஸ்.பி., பி.கே.அர்விந்த் கூறியதாவது: இச்சம்பவத்தில் ஈடுபட்ட உண்மையான குற்றவாளிகளை 28 நாட்களில் தனிப்படை போலீசார் பிடித்துள்ளனர். பணம், நகையை திருடியதாக அவர்கள் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் தனிப்படையினர் விசாரித்து வருகின்றனர். அதற்கு பின்பே மேலும் பல திருட்டுக்களில் அவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது தெரியவரும், என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us