ADDED : பிப் 05, 2024 11:56 PM
சிவகங்கை : சிவகங்கை கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் 60 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.
பொது குறைதீர் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
மக்களிடமிருந்து 386 மனுக்கள் பெறப்பட்டன. பயனாளிகள் 60 பேருக்கு ரூ.2 லட்சத்திற்கான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
விருதுநகரில் நடந்த திருக்குறள் முற்றோதல் நிகழ்வில் வெற்றி பெற்ற சிவகங்கை மாவட்ட மாணவர்களை பாராட்டினார். கலெக்டர் பி.ஏ.,(பொது) ஜெயமணி, உதவி இயக்குனர் (நிலம்) சரவண பெருமாள், உதவி கமிஷனர் (ஆயத்தீர்வை) ரங்கராஜன், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் நாகராஜன் பங்கேற்றனர்.