ADDED : ஜன 11, 2024 03:58 AM
காரைக்குடி : காரைக்குடியில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் 108 ஆம்புலன்சில்இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது.
அரியக்குடி பழனிச்சாமி நகர் ராஜாக்கண்ணு மனைவி மலர்விழி 28. இவருக்கு நேற்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டது. 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளிக்கப்பட்டது அவரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துசென்றனர். வழியில் வலி அதிகமானதால், 108 ஆம்புலன்சிலேயே மலர்விழிக்கு மருத்துவ உதவியாளர் செல்வகுமார் பிரசவம் பார்த்தார். பெண் குழந்தை பிறந்தது.
* சாக்கோட்டை அருகேயுள்ள குறுகலுார் பகுதியைச் சேர்ந்த கருப்பையா மனைவி பெரியநாயகி பிரசவத்திற்காக 108 ஆம்புலன்சில் அழைத்து சென்ற நிலையில் ஆம்புலன்சிலேயே பெண் குழந்தை பிறந்தது.