ADDED : ஜூன் 21, 2024 04:25 AM
தேவகோட்டை: தேவகோட்டை ஆனந்தா கல்லுாரியில் முதுகலை தமிழ்த்துறை சார்பில் உலக அகதிகள் தினம் கொண்டாடப்பட்டது.
முதல்வர் ஜான் வசந்த் குமார் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் தர்மராஜ் கூறுகையில் 2023 ம் ஆண்டு கணக்கின்படி உலகில் 11.73 கோடி பேர் அகதிகளாக உள்ளதாக கூறினார். நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.